அம்பிகை போற்றி!

அம்மன்

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி

ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி

ஓம் அருமறையின் வரம்பே போற்றி

ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி

ஓம் அரசிளங்குமரியே போற்றி

ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி

ஓம் அமுத நாயகியே போற்றி

ஓம் அருந்தவ நாயகியே போற்றி

ஓம் அருள்நிறை அம்மையே போற்றி

ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி (10)

 

ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி

ஓம் ஆதியே பாதியே போற்றி

ஓம் ஆலால சுந்தரியே போற்றி

ஓம் ஆனந்த வல்லியே போற்றி

ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி

ஓம் இமயத்தரசியே போற்றி

ஓம் இடபத்தோன் துணையே போற்றி

ஓம் ஈசுவரியே போற்றி

ஓம் உயிர் ஓவியமே போற்றி

ஓம் உலகம்மையே போற்றி (20)

 

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி

ஓம் எண்திசையும் வென்றாய் போற்றி

ஓம் ஏகன் துணையே போற்றி

ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி

ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி

ஓம் ஒப்பில்லா அமுதே போற்றி

ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி

ஓம் கற்றோர்க் கினியோய் போற்றி

ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி

ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி (30)

 

ஓம் கல்யாண சுந்தரியே போற்றி

ஓம் கனகமணிக் குன்றே போற்றி

ஓம் கற்பின் அரசியே போற்றி

ஓம் கல்விக்கு வித்தே போற்றி

ஓம் கனகாம்பிகையே போற்றி

ஓம் கதிரொளிச் சுடரே போற்றி

ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி

ஓம் காட்சிக் கின்யாய் போற்றி

ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி

ஓம் கிளியேந்திக் கரத்தோய் போற்றி (40)

 

ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி

ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி

ஓம் கூடற் கலாப மயிலே போற்றி

ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி

ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி

ஓம் சக்தி வடிவே போற்றி

ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி

ஓம் சிவகாம சுந்தரியே போற்றி

ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

ஓம் சிவயோக நாயகியே போற்றி (50)

 

ஓம் சிவானந்த வல்லியே போற்றி

ஓம் சிங்கார வல்லியே போற்றி

ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி

ஓம் செல்வத்துக்கரசியே போற்றி

ஓம் சேனைத் தலைவியே போற்றி

ஓம் சொக்கர் நாயகியே போற்றி

ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி

ஓம் ஞானாம்பிகையே போற்றி

ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி

ஓம் தமிழர்குலச் சுடரே போற்றி (60)

 

ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி

ஓம் திருவுடையம்மையே போற்றி

ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி

ஓம் திரிபுரசுந்தரியே போற்றி

ஓம் திருமலை நாயகியே போற்றி

ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி

ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி

ஓம் தென்னவன் செல்வியே போற்றி

ஓம் தேன்மொழியம்மையே போற்றி

ஓம் தையல் நாயகியே போற்றி (70)

 

ஓம் நற்கனியின் சுவையே போற்றி

ஓம் நவசக்தி போற்றி

ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி

ஓம் நல்ல நாயகியே போற்றி

ஓம் நாரணி போற்றி

ஓம் நீலாம்பிகையே போற்றி

ஓம் நீதிக்கரசியே போற்றி

ஓம் பக்தர் தம் திலகமே போற்றி

ஓம் பழமறையின் குருந்தே போற்றி

ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி (80)

 

ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி

ஓம் பவளவாய் கிளியே போற்றி

ஓம் பல்லுயிரின் தாயே போற்றி

ஓம் பசுபதி நாயகியே போற்றி

ஓம் பாகம் பிரியா அம்மையே போற்றி

ஓம் பாண்டிமா தேவியின் தேவே போற்றி

ஓம் பார்வதி அம்மையே போற்றி

ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி

ஓம் பெரிய நாயகியே போற்றி

ஓம் பொன் மயிலம்மையே போற்றி (90)

 

ஓம் பொற்கொடி அன்னையே போற்றி

ஓம் மலையத்துவசன் மகளே போற்றி

ஓம் மங்கள நாயகியே போற்றி

ஓம் மழலைக் கிளியே போற்றி

ஓம் மனோன்மணி தாயே போற்றி

ஓம் மண்சுமந்தான் மாணிக்கமே போற்றி

ஓம் மாயோன் தங்கையே போற்றி

ஓம் மாணிக்க வல்லியே போற்றி

ஓம் மீனவர்கோன் மகளே போற்றி

ஓம் மீனாட்சி அம்மையே போற்றி (100)

 

ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி

ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி

ஓம் யாழ்மொழியம்மையே போற்றி

ஓம் வடிவழகம்மையே போற்றி

ஓம் வானத்து ஜோதியே போற்றி

ஓம் வேலனுக்கு வேல் தந்தாய் போற்றி

ஓம் வேத நாயகியே போற்றி

ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி (108)

 

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஆதிசக்தி பராசக்தி ஓம்!

 

108 அம்பிகை போற்றி பாடி அம்பிகை அருள் பெறுவோம்.

Visited 1 times, 1 visit(s) today