அம்மா அப்பா அறிவோம்

அம்மா அப்பா அறிவோம் என்பது நமது பெற்றோரைப் பற்றிய சில மொழிகள்.

பெற்றோர்கள் நம்முடைய வாழ்விற்கு ஆதாரமானவர்கள் மட்டுமல்லர். நாம் வாழ்க்கைப் பயணத்தில் நேர்வழியில் பயணிக்க காரணமான‌வர்களும் ஆவர்.

அப்படிப்பட்ட பெற்றோர்களைப் பற்றி கண்டிப்பாக அறிந்து கொள்வது அவசியம்.

 

நம்மை உலகிற்கு அறிமுகப்படுத்துபவர் அம்மா

நமக்கு உலகினை அறிமுகப்படுத்துபவர் அப்பா

 

தன்னுடைய இறுதி காலம்வரை நம்மை நேசிப்பவர் அம்மா மட்டுமே.

தன்னுடைய கண்களில்கூட வெளிப்பாடு இல்லாமல் நம்மை நேசிப்பவர் அப்பா.

 

நமக்கு வாழ்க்கை கொடுத்தவர் அம்மா

நம்மை வாழ வைப்பவர் அப்பா

 

நாம் பட்டினியில்லாமல் இருக்க எப்போதும் உணவளிப்பவர் அம்மா

நமக்கு பட்டினியின் மதிப்பினை உணர்த்துபவர் அப்பா

 

நம்முடைய பாதுகாப்பின் (கவனிப்பு) உருவகம் அம்மா

நம்முடைய பொறுப்பின் உருவகம் அப்பா

 

நாம் கீழே விழாமல் பாதுகாப்பவர் அம்மா

நாம் கீழே விழுந்தால் மீண்டும் எழ கற்றுக்கொடுப்பவர் அப்பா

 

நாம் நடக்கக் கற்றுக் கொடுப்பவர் அம்மா

நம்முடைய வாழ்க்கையில் நடக்க கற்றுக் கொடுப்பவர் அப்பா

 

நமக்கு தன்னுடைய அனுபவங்களைக் கற்றுக் கொடுப்பவர் அம்மா

நம்முடைய சொந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள கற்பிப்பவர் அப்பா

 

சிந்தனைகளின் பிரதிபலிப்பு அம்மா

உண்மைகளின் பிரதிபலிப்பு அப்பா

 

அம்மாவின் அன்பு நம்முடைய பிறப்பு முதல் தெரிந்திருக்கும்.

அப்பாவின் அன்பு நாம் தந்தையாகும் போதே தெரியவரும்.

 

இந்தப் பதிப்பு எல்லா பெற்றோர்களுக்கும் சமர்ப்பணம்.