அம்மா…

ஏமாற்றம் நிறைந்த இந்த உலகில்,
என் முகத்தைப் பார்க்காமலேயே
எனக்குக் கிடைத்த வரமே

உனக்காக
இஷ்டப்பட்டு எனக்காக
நீ பட்ட கஷ்டத்தை
சொல்ல வார்த்தைகள்
ஏனோ இல்லையே

ஆயிரம் மன வலி
என்னுள் இருக்கையில்,
அதை அனைத்தையும் மறக்கிறேனே

உன் முகம் பார்த்து
உன் மடி மீது உறங்கையில்

சுமையா நஸ்ரின் நாச்சியா.இ