எங்கள் அண்ணனின் கையெழுத்து இங்கே
எந்தன் இருக்கையில் தெரியுதே!
சிங்கம் போலவே நின்றிடும் வேம்பும்
சிலிர்ப்புடன் பூக்களை பொழிகிறதே!
மங்கிய சுவர்களோ என்னிடம் தனியே
மலை போல் கதைகள் சொல்கிறதே!
எங்குமே சோகம் இல்லா உலகம்
இதுதான் என்பதும் புரிகிறதே!
எங்கள் வகுப்பறை சிரித்திடும் போது
இனிதென காற்றும் வீசுவதேன்!
எங்கோ தூரமாய் கூவிடும் ரயிலும்
எங்களுக்கு உறவாய் தோணுவதேன்!
வெங்கல மணியும் ஒலியை எழுப்பி
விரைந்தே காலத்தை நகர்த்துவதேன்!
திங்களும் பறந்து வெள்ளி கொட்டிட
திரும்பிடா விதமாய் ஓடுவதேன்!
சங்கத் தமிழுடன் சரித்திரம் சேர்ந்திட
சரியாய் கணக்கும் வருகிறதே!
இங்கே வாழும் உலகினை அறிந்திட
இனிதென அறிவியல் இணைகிறதே!
ஆங்கிலம் மட்டும் அடடா என்று
அடக்கித் தானே துடிக்கின்றதே!
வாங்களேன் நீங்களும், அரசுப்பள்ளி இதனை
வாழ்த்தித் தான் பாடுங்களேன்!
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)