அதென்ன நீ மட்டும் விரைந்து
பரவுகிறாய் வேர் கொண்டு
அதென்ன நீ மட்டும் விரைந்து
உருமாறுகிறாய் கடவுள் உரு கொண்டு
அதென்ன நீ மட்டும் விரைந்து
தருகின்றாய் குளிர்ச்சியை உடலுக்கு
அதென்ன நீ மட்டும் விரைந்து
மனித குருதியை சுத்தம் செய்கிறாய்.
அதென்ன நீ மட்டும் விரைந்து
அணைக்கின்றாய் மார்கழியின் பனித்துளியை
என கேள்வி பல கேட்டாலும்
அதென்ன நீ மட்டும் அமைதியாய்
சிரிக்கின்றாய் அன்பான அருகம்புல்லே
இயற்கையுடன் பேச மொழியேதும்
தேவையில்லை என சொன்னதும்
உண்மைதானோ!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!