பெருமாள் வீடு (பாற்) கடல்…
அதில் கழிவுகள் கலக்கச் செய்யலாமா?
கழிவுகள் கலந்த மானுடர்க்கு
சொர்க்க வாசம் அவர்தான் தருவாரா?
அனுமனின் தந்தை (வாயு) காற்று…
அவர் உடலில் நச்சுக்
கரும்புகையினைப் பூசலாமா?
தந்தைக்கு துன்பம் தந்தவர்க்கு
அனுமன் அருளைத் தருவாரா?
கனிவாய் சற்று சிந்திக்கவும்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942