அருவி தரும் ஆரவாரம்
ஆனந்தமா பாட்டு வரும்
சிறுதூறல் பூக்களென
தென் பொதிகை சாரல் விழும்
நறுமணத்தோடு அங்கே
நடனமாட காற்று வரும்
கருங்குருவி கூட்டத்தோடு
கானமயில் ஆடி வரும்
தெருவெங்கும் மந்திகளும்
தீங்கனிகள் தின்ன வரும்
குறுமேக கூட்டமுமே
செல்லமாய் மேனி தொடும்
குறும்பலா நாதன் என
ஈசன் குடியிருந்து ஆட்சி செய்யும்
உறங்காத ஊர் நமக்கு
உறவாக மாறி விடும்
ஒரு முறையேனும் நீங்கள்
இங்கே வந்து தங்கிடனும்
வரம் தரும் இயற்கையின்
வாசலுக்கு வந்திடனும்
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942