தமிழ் இணையஇதழ்களில் நவீனத்தைத் தூக்கி நிறுத்தும் மிகச்சிறந்த இணைய இதழ் அரூ ஆகும். இவ்விதழ் (aroo.space) மட்டும் படித்தாலே போதும். தமிழின் இன்றைய உயரம் தெளி(ரி)ந்து விடும். படிக்கப் படிக்க நீங்களும் இலக்கியத்தில் உயர்வீர்கள். தமிழும் உங்களோடு உயரும்.
அரூ – என்ன? எதற்கு? அவர்கள் மொழியில்…
”அரூ என்பது ‘அரூபத்தின்’ சுருங்கிய வடிவம். முடிவிலா காலமும், வெளியுமற்ற பரப்பில் பறந்து திரிகிற அரூபமான மனித மனம்தான், அத்தனை மொழிகளையும், கலைகளையும், தத்துவங்களையும், உருவங்களையும் நமக்குத் தருவித்துத் தந்திருக்கிறது.
தெரிந்த வடிவங்களின் எல்லைகளுக்குள் பயணிப்பதன் ஊடாக, அரூபத்தின் தரிசனத்திற்கான தேடல்தான் இந்த ‘அரூ’. முக்கியமாக, டிராகன்களுக்குப் பயப்படாத, டிராகன்களைப் பாதியில் விட்டுவிடாத, டிராகன்களுடன் தன் வாழ்நாள் முழுதும் பயணிக்கிற மனங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது.
‘அரூ’ நனவுலகின் விளிம்பில் நின்றபடி, கனவுலகிற்குள் கைவிட்டுப் பார்ப்பதைப் போன்றதொரு முயற்சிதான்.
‘அரூ’ கனவுருப்புனைவு சார்ந்த படைப்புகளை வெளியிடும் தமிழ் மின்னிதழாக இருக்கும். இது, சிறுகதைகள், குறுங்கதைகள், ஓவியங்கள், புகைப்படங்கள், காமிக்ஸ், நடனம், இசை என அத்தனை கலை வடிவங்களுக்குமான களமாக இருக்கும்.
எவ்வகைமையிலும், வடிவிலும் அடங்காத பரீட்சார்த்த கலைப் படைப்புகளையும் அரூ வெளியிடும். அரூவை வாசிக்க, தமிழும், சிறிது கற்பனையும், தீராத தேடலும் போதும். காலாண்டுக்கு ஒரு முறை, உங்களைச் சந்திக்கவிருக்கிறோம்.”
இவ்விதழின் சிறப்புமிகு பக்கங்களாகக் கீழ்காணும் தலைப்புகள் உள்ளன.
• முகப்பு
• கதை
• கவிதை
• கட்டுரை
• நேர்காணல்
• ஓவியம்
• பிற
◦ வரைகதை
◦ புகைப்படம்
◦ இசை
◦ தலையங்கம்
◦ பொது
◦ English WorkS
• தொடர்கள்
• படைப்பாளிகள்
இக்காலாண்டிதழின் படைப்புகள் எப்படி இருக்கும் என்பதைக் கூறும்பொழுது,
”மேற்குலகில், அறிவியல் புனைவையும் (science fiction) மிகைப்புனைவையும் (fantasy) ஒன்றாகச் சேர்த்து ஊகப்புனைவு (speculative fiction) என்றழைக்கிறார்கள்.
சமகாலப் புனைவின் கலந்தூடாடும் தன்மையின் காரணமாக, வகைமைகளின் இறுக்கம் மெல்லத் தளர்ந்து வருகிறது. கற்பனாவாதம் மிகுந்த அத்தனை புனைவுகளையுமே (அறிவியல் புனைவு உட்பட), கனவுருப்புனைவென அழைத்துக்கொள்வோம்.
தமிழில், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் தொடங்கி சமீபத்திய குள்ளச் சித்தன் சரித்திரம் வரை கனவுருப்புனைவின் வரலாறு நீண்டிருக்கிறது.
அறிவியல் புனைகதைகள், இயற்கையை மீறிய, அதற்கு மேற்பட்ட அல்லது வினோதமான ‘காத்திக்’ (Gothic) வகை கதைகளிலிருந்து வந்தவை என்கிறார் அக்கதைகளின் முன்னோடியான சுஜாதா (‘விஞ்ஞானச் சிறுகதைகள்’ தொகுப்பின் முன்னுரையில்). அவரது காலம் தொட்டு ஜெயமோகனின் ‘விசும்பு’ வரையான பரப்பு இருந்தாலும், தமிழில் அறிவியல் புனைவு பரவலாக எழுதப்படவில்லையோ எனத் தோன்றுகிறது.
நேர்மாறாக, ஆங்கிலத்தில் அறிவியல் புனைவுகள், விண்வெளிப் பயணங்களையும், வேற்றுகிரக வாசிகளையும், ரோபாட்களையும் தாண்டி நுட்பமான எல்லைகளைத் தொட்டு வருகின்றன. நெட்ப்ளிக்ஸின் (Netflix) பிரபலமான ‘Black Mirror’ தொலைக்காட்சித் தொடரை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
மிகைப் புனைவு, அறிவியல் புனைவு என அத்தனை வகைமைகளின் நோக்கம் ஒன்றாகவே இருக்கிறது – அறிவியலின், சித்தரிக்கப்பட்ட உலகின், ஊடாக மனிதனின் இருப்பையும், அகத்தையும் அறிய முயல்தல்.”
இவ்விதழின் படைப்பாளர்கள் பட்டியலில் உள்ள படைப்பாளிகளின் படைப்பைக் கண்டு தெளிந்தாலே போதும், இக்காலகட்டத் தமிழ் நவீன இலக்கியத்தைக் கண்டுணர்ந்தவர்களாக ஆவர். அதற்குரியவர்கள்:
(அரூவில் இதுவரைப் பங்களித்தவர்கள்)
• அதியன்
• அதீதன்
• அராத்து
• அரூ குழுவினர்
• அனுஷா ஸ்ரீநிவாசன்
• அஜீக்
• அஷ்வினி செல்வராஜ்
• ஆர்.ராகவேந்திரன்
• ஆஷிக்
• இசை
• இயந்திரக் கவி
• இராம கண்ணபிரான்
• இலக்கியா சீனிவாசன்
• இளஞ்சேரன் குணசேகரன்
• இளையபாரத்
• இனியன்
• உமா கதிர்
• உனாகா
• எம்.கே.குமார்
• க.கவினெழில்
• கணேஷ் பாபு
• கண்ணன்
• கலாப்ரியா
• கவிஜி
• காயத்ரி
• கார்த்திக் திலகன்
• கார்லா
• கிரிதரன் கவிராஜா
• குணா கந்தசாமி
• குரியன்
• கே.பாலமுருகன்
• கோ.கமலக்கண்ணன்
• கோணங்கி
• க்வீ லீ சுவி
• ச.துரை
• சஞ்சனா
• சத்யானந்தன்
• சந்துரு
• சரவணன்
• சன்னி லியு
• சாதனா
• சாரு நிவேதிதா
• சி.சரவணகார்த்திகேயன்
• சிரில் வாங்
• சிவானந்தம் நீலகண்டன்
• சு.நாராயணி
• சுசித்ரா
• சுபா செந்தில்குமார்
• சுரேஷ் பிரதீப்
• சுனில் கிருஷ்ணன்
• சுஜா செல்லப்பன்
• செம்மல்
• செல்வசங்கரன்
• செல்வேந்திரன்
• டிராட்ஸ்கி மருது
• டீன்கபூர்
• டோனி ப்ரஸ்லர்
• தமிழ்மணி
• தன்ராஜ் மணி
• தேவதேவன்
• நகுல்வசன்
• நந்தாகுமாரன்
• நிவேதினி நாகராஜன்
• பச்சமுத்து தில்லைக்கண்ணு
• பார்கவி
• பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
• பாலா
• பி.பிரசன்னா
• பிரதீப் பாலு
• பிரபாகரன் சண்முகநாதன்
• பிரஷாந்த் டெக்னோ
• பிரேம பிரபா
• பெரு.விஷ்ணுகுமார்
• மஹேஷ்குமார்
• மாயா
• முத்துராசா குமார்
• முரளிதரன்
• மௌனன் யாத்ரிகா
• யவனிகா ஸ்ரீராம்
• யாழிசை மணிவண்ணன்
• ரவி பேலட்
• ரவிசுப்பிரமணியன்
• ரவிஷங்கர்
• ரா.கிரிதரன்
• ராம்சந்தர்
• ரூபியா ரிஷி
• வரதராஜன் ராஜூ
• விக்டர் ஒக்காம்போ
• விஜய ராவணன்
• விஸ்வநாதன்
• வே.நி.சூர்யா
• வேணு வேட்ராயன்
• வைரவன் லெ ரா.
• றியாஸ் குரானா
• ஜமீல்
• ஜெயந்தி சங்கர்
• ஜெயமோகன்
• ஷண்முகராஜா
• ஹேமா
அரூ இதழை வாசித்து உயர வேண்டுமா? https://aroo.space எனும் சொடுக்கியைச் சொடுக்கி உயருங்கள்.
(இணையம் அறிவோமா? தொடரும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com
Comments
“அரூ – நவீனத்தைத் தூக்கி நிறுத்தும்” அதற்கு 2 மறுமொழிகள்
பயனுள்ள கட்டுரை
தொடர்ந்து சிறந்த இணையதளத்தையும் மனிதர்களையும் அறிமுகம் படுத்தும் உங்கள் முயற்சியை பெரிதும் மெச்சுகிறேன்.
மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று சும்மா விடுவதாய் இல்லை.
மகிழ்ச்சியும் அன்பும் வாழ்த்துக்களும் ஐயா