பண்படவே உயர்பெறவே நிலைபெறவே பயின்றிடுவோம்
பண்ணிசைத்து செந்தமிழில் சுவைபடவே பாடிடுவோம்
எண்ணிறைந்த பொருள்களிலும் தமிழ் மொழியை ஏற்றிடுவோம்
அண்டமெல்லாம் தமிழன்னை புகழோங்கச் செய்திடுவோம்
கல்விதனின் பெருமைதனை செவிதனிலே புகுத்திடுவோம்
கல்லாத பேர்களையும் பயனடைய வைத்திடுவோம்
நல்லிணக்க வாழ்வதனை புவிமுழுதும் ஆக்கிடுவோம்
செம்மொழியில் சுவைகுறையா புதுக்கவிதை படைத்திடுவோம்
நம்மினிய வரிகளிலே புதுமைகளை வரைந்திடுவோம்
நம்மிதழில் பலமுறையே தொடர்ந்திடவே செய்திடுவோம்
கல்விதரும் ஆசிரியர் திருவடியை வணங்கிடுவோம்
எல்லையில்லா மகிழ்வுடனே தமிழ் மொழியில் வாழ்த்திடுவோம்
நல்லுலகம் உயர்ந்திடவே பண்புடனே வாழ்ந்திடுவோம்
இனியுலகம் இனிதுடனே உன்னையேற்கும் உடனடியாய்
தனியுலகம் படைத்திடுக அறநெறியில் சென்றிடுக
தனித்துவமாய் திகழ்திடுக முத்தமிழை வளர்த்திடுக
இனித்தொடரும் இருநிலமும் தேன்தமிழில் வணங்கிடுமே!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!