பாவம் செய்து விட்டோமா
ஆசிரியராக உயர்ந்து?
தணியாத கொரானா தாக்கத்தால்
தனியாகத் தவிக்கிறோம் தாகத்தோடு
தனியார்பள்ளி ஆசிரியர்கள்
உழைப்பிலும் மாணவர்
உருவாக்கத்திலும் அரசுப்பள்ளியைவிட
உயர்ந்தவர்கள்தான் நாங்கள்
எங்கள் கூக்குரலுக்கு குரல்கொடுக்க
எந்த கூட்டமும் கூடவில்லையே
எங்கள் வறுமை வாழ்விற்கு
வழிகொடுக்க
வந்தவர் எவருமில்லையே
பணியிழந்து பணமிழந்து
மனமிழந்த நாங்கள்
செய்வதறியாது தவிக்கின்றோம்
தெய்வமாய் வாழ்ந்த நாங்கள்
தெருவோரம் தேங்காய் விற்கும்
நிலைக்கும் தள்ளப்பட்டோம்
அறியாமையை அகற்றிவிட அறிவு
தீபத்தை ஏற்றிவிட்ட எங்கள்
வயிறுகளின் பசித்தீ அகலவில்லை
தமிழக அரசே
நிவாரணத்தை உதாரணமாகக் காட்டாமல்
நிம்மதியாக வாழ நிலையான
நிவாரணம் தாருங்கள்
பாத்திரமும் பசியும் நிரம்பாமல்
பாவப்பட்டுத் தவிக்கும்
தனியார்பள்ளி ஆசிரியர்கள்
கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்