அறிவியல் வளர்ச்சி

அறிவியல் வளர்ச்சி

அறிவியல் வளர்ச்சி இன்றைக்கு விண்ணைத் தொட்டு விட்டது எனலாம். நம் வாழ்வின் எல்லாத் துறைகளையும் அறிவியல் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கின்றது.

ஒரு காலத்தில் விளக்கெரிக்க நாம் எண்ணெயைப் பயன்படுத்தினோம். அதற்கென ஓர் எண்ணையை ஒதுக்கி அதற்கு விளக்கு எண்ணெய் என்று பெயரிட்டோம். இன்று விளக்கெண்ணெய் விளக்கைக் காண இயலாது. இன்று சிறு பட்டி, தொட்டி, கிராமங்களில் கூட பளிச்சென்று மின்விளக்கே வீசுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் கற்பனை செய்து கூட பார்க்க இயலாதவை இப்போது நனவாகி விடுகின்றன.

இன்று உலகத்தின் ஒரு கோடியிலிருந்து மறு கோடியில் இருப்பவர்களுடன் தொலைபேசி மூலம் நொடியிற் பேச இயல்கிறது.

ஒரு சில மணி நேரங்களில் நாடுவிட்டு நாட்டுக்கு பறந்து செல்வது எளிதாகிவிட்டது. ஒரு கோளிலிருந்து மறுகோள்களுக்குச் சென்று திரும்பக் கூடிய நாள் தொலைவில் இல்லை.

அண்டவெளி என்றும், எல்லையற்ற தென்றும் சொல்லப்படுகிற ஆகாயப் பரப்பையும் மனிதன் தனது ஆக்கிரமிப்பில் வைக்க முயற்சி செய்ய ஆரம்பித்துவிட்டான்.

அணுவைப் பிளந்து, அதில் மகத்தான சக்தியை உண்டாக்கி, அதையும் நல் வாழ்வதற்குப் பயன்படுத்த உலகின் எல்லாப் பகுதிகளிலும் தீவிரமான ஆராய்ச்சிகளும், சட்டங்களும் செய்யப்பட்டு வருகின்றன. அப்படிச் செய்யும் போதுதான், விஞ்ஞானத்தின் நன்மைகளை அன்றாட வாழ்வில் அனுபவிக்க இயலும்.

உழவுக்கும், தொழிலுக்கும் அறிவியல் துணைபுரிகின்றது. நிலத்தை உழுவதற்கும், உரத்தை இடுவதற்கும் வேளாண்மை பண்ணைகள் பெருகுவதால் இயந்திரங்களின் உதவியால் ஆழ்கிணறுகள் தோண்டி, நீர்நிலைகளைப் பெருக்கி பசுமை மாட்சியை காணமுடிகின்றது.

மின் விளக்கைக் கண்டு பிடிப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தவர் பெஞ்சமின் பிராங்கிளின் என்னும் அமெரிக்கரே ஆவர். முதலில் மின் தூண்டலைக் கண்டுபிடித்தவர் மைக்கேல் பாரடே என்பவர் ஆவார்.

ஆதிகாலத்தில் மனிதன் ஏட்டில் எழுதிக் கொண்டிருந்தான். ஆனால் இன்று மனிதன் பேனா என்னும் கருவியால் எழுதுகிறான். இதை வாட்டர்மென் என்னும் அமெரிக்கர் கண்டுபிடித்தார்.

இன்று பல விஞ்சானிகள் இணையம் மூலம் மனித வாழ்வின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே இருக்கின்றனர்.

கால்நடையாகவும், கட்டைவண்டியிலும் இடத்தை கடந்து வந்த மனிதன் உந்துகளிலும், ஊர்திகளிலும் உலகை வலம் வருகிறான்.

அன்று கால் வலிக்க நடந்து சென்ற மனிதன், இன்று இரயில், மோட்டார் விமானம், கப்பல் முதலியவற்றின் உதவியால் ஒரு நொடியில் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்கிறான். இதற்குக் காரணமானவர்கள் ஜேம்ஸ், வாட் ஹென்றி ஆவார்கள்.

ஆயிரக் கணக்கான கற்களுக்கு அப்பால் உள்ள நாடுகளுக்கு அடுத்த ஊர்கள் போன்று நெருங்கி தோன்றுகின்றன. தொடர் வண்டிகளில் நிலக்கரிக்கு பதிலாக மின் ஆற்றலை கையாண்டு வேகத்தைப் பெருக்குகின்றனர்.

விமான போக்குவரத்தில் எரிபொருளை குறைத்து வேகத்தைக் கூட்ட முன்வந்துள்ளனர். அணுவின் ஆற்றலால் விசைக் கப்பல்களை இயக்க அறித்துள்ளார்.

நாம் வசிக்கும் இல்லத்தில் மின்விளக்கு, மின்விசிறி முதலியன அமைத்து நமக்கு பணி புரிகின்றன. வெந்நீர் வேண்டுமானாலும் உடைகளை துவைத்து வெளுக்க வேண்டுமானாலும் தோசை, இட்லிக்கு மாவாட்ட வேண்டுமானால் பொடியாக்க அரைக்க வேண்டுமானாலும் மின்னாற்றல் நமக்கு உதவி புரிகின்றது.

விரைவில் உணவை சமைக்கும் அழுத்த குக்கர்கள், குளிர் கருவிகள், அரைக்கும் எந்திரங்கள் முதலியன அன்றாட வேலைகளின் நேரத்தையும், நமது பயனற்ற உடல் உழைப்பையும் குறைக்கின்றன.

நமது ஓய்வு நேரத்தைப் போக்கப் பயன்படும் வானொலி, திரைப்படக் காட்சி, இணையம் முதலியனவும் மின்னாற்றலைக் கொண்டே இயங்குகின்றன.

இணையம் உள்ளங்கையில் உலகம் என்பதை உண்மையாக்கி விட்டது.

அறிவியல் வளர்ச்சி இன்று மனித வாழ்வின் எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்கிறது.

S.ஆஷா