அறிவும் வேண்டும் இதயமும் வேண்டும்

வாழ்க்கையை அணுக இருமுறைகள் உண்டு. அறிவு பூர்வமாக அணுகுவது. இதய பூர்வமாக அணுகுவது.

அறிவு பொருளாதார வாழ்வை வளப்படுத்த தேவை தான். பொருளாதார வளம் நமக்கு நிறைவை கொடுத்து விடுமா?

எனக்குள் தோன்றிய கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். என்னுள் தோன்றிய எண்ணங்களை வார்த்தை ஆக்க முயல்கிறேன்.

பொருளாதார ரீதியாக வளர்ந்த மேலைநாடுகளில் மன அழுத்த நோய்கள் அதிக அளவில் உள்ளது. வேகமான வாழ்க்கை சூழ்நிலைகளில் மன அழுத்த நோய்களுக்கு ஆட்பட வேண்டி இருக்கிறது.

வாழ்க்கையை அறிவு பூர்வமாக மட்டும் அணுகுவது தீர்வாக இருக்க முடியாது. இதய பூர்வமாக அணுகுவது தீர்வாக முடியுமா?

சமநிலை மனோநிலை வேண்டும். அறிவு மற்றும் இதயம் இரண்டையும் நாம் பயன்படுத்த வேண்டும்.

நமது பரிமாண நிலையில் முக்கிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அறிவை உபயோகப்படுத்தி பொருளாதார தேவைகள் மற்றும் புறத்தேவைகளை நிறைவு செய்து விட்டோம். ஆனால் உள்நிலை வெறுமையாக உள்ளது.

மனிதம் நிம்மதியற்று உள்ளது. அறிவினால் பெற்ற வசதிகளை நாம் சிறப்பாக அனுபவிப்பதற்கும் உள்நிலையில் அமைதி தேவைப்படுகிறது.

உள்நிலை அமைதி என்பது நமது இதயத்தின் மூலம் சாத்தியம் ஆகும். இதயபூர்வமான அணுகுமுறை வாழ்வின் பல சாத்திய கூறுகளை திறந்து விடும்.

அறிவு மற்றும் இதயம் இரண்டும் ஒருங்கே போனால் நிறைவான வாழ்வு எய்த முடியும்.

– சிறுமலை பார்த்திபன்