அறிவோம் தமிழ்ச் சொற்கள்

ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்ளவே, இந்த அறிவோம் தமிழ்ச் சொற்கள் பகுதி. 

இன்றைக்கு பெரும்பாலும் பல பொருட்களின் பெயர்களை, நாம் ஆங்கிலத்திலேயே உச்சரிக்கின்றோம். அவற்றுக்கான தமிழ்ச் சொற்களை நாம் அறிந்து கொண்டு பயன்படுத்துவது, தமிழ் வளர்ச்சிக்கு உதவும்.

படித்து பயன் பெறுங்கள்.

அறிவோம் தமிழ்ச் சொற்கள்

வ. எண் ஆங்கிலச் சொல் தமிழ்ச் சொல்
1

Broad band

ஆலலை
2

On line

இயங்கலை
3

Off line

முடக்கலை
4

Thumb drive

விரலி
5

Hard disk

வன் தட்டு
6

Battery

மின் கலம்
7

Smart Phone

திறன் பேசி
8

Sim Card

செறிவு அட்டை
9

Charger

மின்னூக்கி
10

Digital

எண்மின்
11

Cyber

மின்வெளி
12

Router

திசைவி
13

GPS

தடங்காட்டி
14

CCTV

மறை காணி
15

OCR

எழுத்து உணரி
16

LED

ஒளிர்வி முனை
17

3D

முத்திரட்சி
18

2D

இருதிரட்சி
19

Projector

ஒளி வீச்சி
20

Printer

அச்சுப் பொறி
21

Scanner

வருடி
22

Car

மகிழுந்து
23

Truck

சரக்குந்து
24

Bus

பேருந்து
25

Bicycle

மிதிவண்டி
26

Helicopter

உலங்கூர்தி
27

Rail

தொடர் வண்டி
28

Air plane

வானூர்தி
29

Bike

விசையுந்து
30

Selfie

தம்படம்
31

Thumbnail

சிறுபடம்
32

Meme

போன்மி
33

Print Screen

திரைப் பிடிப்பு
34

Inkjet

மை வீச்சு
35

Laser

சீரொளி
36

Whats App

புலனம்
37

Face book

முகநூல்
38

You tube

வலை ஒளி
39

Instagram

பட வரி
40

We chat

அளாவி
41

Messenger

பற்றியம்
42

Fan

மின் விசிறி
43

Fridge

குளிரூட்டி
44

Micro oven

நுண்ணலை அடுப்பு
45

Air Conditioner

காற்று பதனி
46

Mixer Grinder

மின் கலப்பி
47

Vacuum cleaner

தூசு உறிஞ்சி
48

Hair Drier

மயிர் உலர்த்தி
49

Washing machine

துணி துவைப்பி
50

Twitter

கீச்சகம்
51

Tel gram

தொலை வரி
52

Skype

காயலை
53

Blue tooth

ஊடலை
54

Wi fi

அருகலை
55

Hot spot

பகிரலை
56

Escalator

நகரும் படிக்கட்டு
57

Lift

மின் தூக்கி
58

Adopter

பொருத்தி
59

Agency

முகவாண்மை
60

Agent

முகவர்
61

Air mail

வானஞ்சல்
62

Air Port

வானூர்தி நிலையம்
63

Alarm

அலறி
64

Ambulance

நோயர் உந்து
65

Antenna

உணர் சட்டம்
66

Apartment

அடுக்ககம்
67

Appeal

முறையீடு
68

Appointment

அமர்த்தம்
69

Accident

நேர்ச்சி
70

Album

தொகுப்பு
71

Amplifier

பெருக்கி
72

Academy

கழகம்
73

Accountant

கணக்கர்
74

Xerox

நகல்
75

email

மின்னஞ்சல்
76

Fax

நிகரி

 

அறிவோம் தமிழ்ச் சொற்கள் பகுதியைப் படித்து ஆங்கிலத்துக்கு இணையான தமிழ்ச் சொற்களை இளைய தலைமுறையினருக்கும் அறிமுகப்படுத்துவோம்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.