பெருங்கேடான
வார்த்தைகளை
வழக்கமாய் இறக்கி விட்டு
மேலான மனிதனென
நெடுங்கதை சொல்பவன்
தொடர்வான்…
கிழியத் துவைத்தும்
வெளுக்கவில்லை
ஆழ்மன அழுக்கு
எனில் மூளைக்கான
காரியம் ஏதுமில்லை…
இம்சைகளுடனான
ஒரு பயணம்
அகிம்சை தேடியபடி
ஏதும் பலனின்றி!
தேடுதல் வேட்டையில்
தென்படாத விடைகள்!
அலைதலின் பொருட்டான
அற்பங்களில்
எத்தர்கள் ஏதேதோ
ஏவியபடி
கடந்தபடி
சொல்லெறிதலில்
நன்னெறியற்ற
அந்தஸ்தின்
பெருமை சிறுமை
சுயமிழந்தபடி
அமையும்
அவல ஆரவாரம்
ரசிக்கப்படவில்லை
புத்தரின்
பூப்படமொன்று
பொருந்தி வருகிறது
அகிம்சையோடு
ஆசை விலக்கி
இருப்பதைக் கொண்டாடும்
இதயம் வேண்ட
ஈர்க்கிறார்!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com
மறுமொழி இடவும்