முள் சீதா வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய, லாபம் தரக்கூடிய அற்புதமான ஒரு பழப்பயிர். இதன் பழங்களில் மருத்துவகுணம் அதிகம். வயிறு, மார்பு, நுரையீரல், கணையம் உள்ளிட்ட பன்னிரெண்டு வகையான கொடிய புற்று நோய்களை இப்பழங்கள் குணப்படுத்த வல்லவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
அமேசான் காடுகள் தான் முள் சீதாவின் பிறப்பிடமாகும். தற்போது பல வெப்பமண்டல நாடுகளில் பரவி வருகின்றது. பிலிப்பைன்ஸ், மலேசியா, மெக்சிகோ. ஆப்பிரிக்கா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயிர் செய்யப்படுகின்றது.
நம்நாட்டைப் பொறுத்தவரை கேரளா மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் இயற்கையாகக் காணப்படுகின்றது. இதே போல் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள பல நாடுகளிலும் இது இயற்கையாக வளர்கின்றது.
தண்ணீர் தேங்காத எல்லாவகை மண்ணிலும் முள்சீதா நன்றாக வளரும். இது கிராமப் புறங்களில் இராம் சீத்தா என்று அழைக்கப்படுகிறது. விதை மூலமாகவும், மொட்டுக் கட்டிய ஒட்டுச் செடிகளைக் கொண்டும் பயிர் செய்யலாம்.
பொதுவாக இது மே மாதம் பூத்து ஆகஸ்டு முதல் அக்டோபர் வரை பழம் தரும். ஒரு செடிக்கு சராசரியாக நூறு பழங்கள் கிடைக்கும் முற்றிய பழங்களை கனிவதற்கு முன்பே பறித்து விற்பனை செய்ய வேண்டும்.
முள் சீத்தா சுமார் 20 அடி உயரம் வரை வளரக்கூடியது. பசுமை மாறாத இம்மரம் பளபளப்பான இலைகளுடன், பழங்களின் வெளிப்புறத்தில் வளைந்த மிருதுவான முள் போன்ற வளர்ச்சிகளுடனும் காணப்படும்.
பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகள் கலந்து இருக்கும் இப்பழம் இதய வழவத்திலோ, நீள் முட்டை வடிவத்திலோ அல்லது ஒழுகற்ற வடிவத்திலோ காணப்படும். முள் சீதா பழங்கள் உருவத்தில் பெரிதாக இருக்கும். ஒவ்வொரு பழமும் சுமார் மூன்று கிலோ முதல் ஐந்து கிலோ வரை கூட எடை இருக்கும். ஒரு பெரிய பழத்தின் நீளம் சுமார் ஒரு அடியும், அகலம் அரை அடியும் இருக்கும்.
அடர்பச்சை நிறமுள்ள காய்கள் முதிர்ந்ததும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திற்கு மாறும். சதைப்பகுதி நாட்டு சீத்தா போலவே வெண்மை நிறமாகவும், சுவையாகவும் இருக்கும். ஆனால் இதன் மணமானது எலுமிச்சை, அண்ணாச்சி, முலாம்பழம், ஸ்டிராபெரி பழங்களின் மனம் கலந்த ஒரு விதமான வாசனையுடன் இருக்கும்.
சாகுபடிக்கு ஏற்ற பகுதிகள்
நல்ல சூரிய வெளிச்சம், நடுத்தர ஈரபதம், வெதுவெதுப்பான வெப்பநிலை உலர்ந்த காலநிலை உள்ள வெப்பமண்டலப் பகுதிகளில் முள்சீத்தா நன்றாக வளரும். வேகமாகக் காற்றடிக்கும் பகுதிகளும், குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை உள்ள பகுதிகளும் இதற்கு ஒத்துவராது. நல்ல வளமான, ஆழமும், வடிகால் வசதியும் கொண்ட மண் இத்தாவரம் பயிர் செய்ய ஏற்றது.
முள் சீத்தாவில் இயற்கையாகவே பல ரகங்கள் உள்ளன. பழங்களின் சுவையைப் பொறுத்து இதய வடிவம், உருண்டை வடிவம், ஒழுகற்ற வடிவம் என்ற மூன்று வகைகளில் காணப்படுகின்றன.
இப்போதைக்கு கியூபா நாட்டின் பென்னட் என்ற முள்சீத்தா பழம் தான் சிறந்த ரகமாகப் போற்றப்படுகிறது. இது நார் தன்மை இல்லாத சுவையான பழங்களை உற்பத்தி செய்யும் ரகம் ஆகும்.
சாகுபடி நுட்பம்
முள் சீதா விதைகள் விதைத்து இரண்டு முதல் நான்கு வாரங்களில் முளைத்துவிடும். ஒரு அடி உயரம் வளர்ந்ததும் எடுத்து நடவு செய்யப்படுகிறது. வேர்குச்சிகளில் ஒட்டுக்கட்டியும் உயர்ரக நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மழைகாலங்களில் 2’ X 2’ X 2’ அளவு குழிகளை 5 மீட்டர் இடைவெளியில் எடுத்து கொள்ள வேண்டும். அதில் தெளிவான கன்றுகளை ஊன்ற வேண்டும். ஏக்கருக்கு 160 செடிகள் நடலாம்.
ஹவாய் தீவுகளில் வருடத்திற்கு மூன்று பருவங்கள் இம்மரம் பூப்பதால், மூன்று முறை அறுவடை செய்கிறார்கள். பொருத்தமான காலநிலை நிலவுவதால் மூன்றுமுறை அறுவடை செய்ய முடிகிறது. கேரளா மற்றும் கன்னியாகுமரிப் பகுதிகளில் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் முள் சீத்தாமரம் பூக்கிறது. ஜுன் – ஜுலை மாதங்களில் பழங்களை அறுவடை செய்கின்றனர். இத்தாவரத்தின் பழங்கள் பெங்களுர் மார்க்கெட்டில் கிடைக்கும்.
மருத்துவக்குணம்
இப்பழத்தில் பல அபூர்வ சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டது. இதன் இலைகள் பட்டை, மரம், பழம், விதை, வேர் என தாவரத்தின் எல்லா பாகங்களும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. இதில் உள்ள அசிட்டோஜெனின் என்ற மருந்துப் பொருளே இதன் அபூர்வ மருத்துவத் தன்மைக்கு காரணமாக விளங்குகிறது.
இப்பழங்களில்தான் மருத்துவகுணம் அதிகம். வயிறு, மார்பு, நுரையீரல், கணையம் உள்ளிட்ட பன்னிரெண்டு வகையான கொடிய புற்று நோய்களை இப்பழங்கள் குணப்படுத்த வல்லவை என்று கண்டறியப்பட்டுள்ளது. தற்பொழுது புற்று நோய்க்கான கீமோ தெரபியில் பயன்படுத்தப்படும் அட்ரிமைசின் சிகிச்சையை விட பன்மடங்கு திறன் பெற்றவை.
முள் சீத்தாப் பழங்களில் அடங்கியுள்ள புற்றுநோய் எதிர்ப்பு வேதிப் பொருள் புற்று நோய் செல்களை மட்டுமே அழிக்கும். ஆரோக்கியமான செல்களுக்கு எவ்விதமான ஆபத்தினையும் இப்பழங்கள் ஏற்படுத்துவதில்லை என்பது இதன் சிறப்பாகும். மேலும் கீமோதெரபியின் பக்க விளைவுகளான வாந்தி, அலர்ஜி, முடிகொட்டுதல் போன்ற தொந்தரவுகளும் இப்பழத்தினால் ஏற்படாது.
முள் சீத்தாப்பழம் எதிர்காலத்தில் மனித குலத்தை புற்று நோய்க் கொடுமையில் இருந்து காப்பாற்றும் அருமருந்தாக உள்ளதால் பல நாடுகளிலும் இதன் மருத்துவத் தன்மை பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
புற்றுநோய் மட்டுமின்றி மூட்டுவலி, சிறு நீரகப் பிரச்சினை, குடல்புழு போன்ற தொல்லைகளில் இருந்தும் இப்பழங்கள் நம்மைக் காப்பாற்றவல்ல மருந்துகளைக் கொண்டுள்ளன.
போதை அடிமைகளைக் குணமாக்க வல்ல மருந்து காய்களில் உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் இதன் விதைகளைப் பொடி செய்து அதைப் பேன் மருந்தாக பயன்படுத்துகின்றனர். இலை மற்றும் தண்டுப்பகுதிகளில் மலேரியா நோய் எதிர்ப்பு மருந்து உள்ளது. பூக்கள் கண்புரை (கேட்ராக்ட்) நோயைக் குணப்படுத்தும்.
இதய நோய் மற்றும் நரம்புக் கோளாறுகளைத் தடுக்கும் மருந்துப் பொருள் இதன் மரப்பட்டையில் இருக்கிறது. வேர்ப்பகுதி குடல் புழுக்களை அகற்றவும், விஷ முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது. இலைக்கசாயம் உயர் ரத்த அழுத்தம், நீரழிவு தோல் நோய்களைக் குணப்படுத்தும்.
இதில் எல்லா வகையான வைட்ட மின்களும் நிறைந்துள்ளன. பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாதுப் பொருட்களும் உள்ளன. ஒரு பழம் சுமார் 60 கலோரி சக்தியைத் தரவல்லது. இவ்வாறு ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருளாகவும் விளங்குகிறது.
அதிக அளவில் முள்சீத்தா பழங்கள் மற்றும் இலையைப் பயன்படுத்துவதால் நடுக்கு வாதம் ஏற்படும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இந்தப்பழத்தை குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.
அதிகப் பயன் தரும் முள் சீதா மரத்தை நட்டு அனைவரும் பயன் பெறுவோம்.