அலைபேசியின் அடாவடி!

காலையும் மாலையும்

கோதையின் திருப்பாவை

வாசகர் எம்பாவை

கூப்பிட்டும் குரல் கேட்டு…

என கண்ணனை அழைக்கும்

கோவிலின் பாட்டொலி…

மணிக்கு ஒரு முறை

நேரம் சொல்லி

பைபிளின் வசனத்தையும்

சொல்லி வரும்

தேவன் கோவில் மணியோசை…

ஐந்து வேளையும்

பாங்கு ஓதும்

மசூதியின் ஒலி…

என இனிமையாக இருந்த நாட்களை

நம்மிடம் இருந்து பிரித்து விட்டது

செவிஒலி ( Head phone ) வாங்கி

வழியாக எப்போதும்

பாடிக் கொண்டிருக்கும்

அலைபேசியின் அடாவடி!

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்