அழகழகா பூத்திருக்கு
ஆதவனின் முகம் பார்த்து
எழுந்து அவன் கைகோர்க்க
எப்போதும் காத்திருக்கு!
சிலநேரம் இதழ் உதிர
சீக்கிமாய் வாடிடினும்
அழுதிடாது மீண்டு வந்து
அடுத்த மலர் விரித்தபடி
சிரித்து நிற்கும் தாமரையே
உன் பார்வையிலே சாய்வில்லை
ஒரு போதும் சரிவில்லை
பாராளும் ஆதவன் தான்
உன் இலக்கு
அதில் எப்போதும் வழுக்கலில்லை
என் இலக்கை அடைவதற்கு – நீ
சொல்லும் பாடத்தினை அறிய
எனக்கு அறிவுமில்லை!
வெல்லும் வரை துவளாது
நடைபோட துணிவு மில்லை!
உள்ளபடி உன் வாழ்க்கை உயர
வழி காட்டுவதை உணர்த்த
நல்ல தலைவனில்லை!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!