அழகு அழகு மலர்கள்
மென்மையான மலர்கள்
வண்ண வண்ண மலர்கள்
வாசனை மலர்கள்
வண்ண மலரின் வாசத்திற்கு
என்ன காரணம்?
எளிதில் ஆவியாகிடும்
கரிமச்சேர்ம கூட்டுகள்
மலரில் ஒன்றாய் இருப்பதால்
மணத்தை நமக்கு தருகுதாம்!
நிறமிச் சேர்மம் இருப்பதால்
மலர்கள் வண்ணம் பெருகுதாம்!
நிறம் மணம் இருப்பதால்
பூச்சி பல வருகுதாம்!
மலரின் இனச்சேர்க்கைக்கும்
வழிவகை செய்யுதாம்
ஆஹா! ஆஹா! அதிசயம்!
வண்ண மணமலர்களால்
அச்செடியும் புவியில் வாழ்வதே!
– முனைவர்.ஆர்.சுரேஷ்
ஆராய்ச்சியாளர்
பகுப்பாய்வு மற்றும் கனிம வேதியியல் துறை
கன்செப்ஷன் பல்கலைக்கழகம், சிலி
WhatsApp +91 9941633807
மறுமொழி இடவும்