நீ என்ற ஒற்றைச்
சொல்லில் தொடங்கி
ஓம் என்ற இரு மந்திரத்தோடு
முருகா என்ற மூன்றெழுத்துப்
பெயராகி…
பிரணவ என்ற நாலெழுத்தின்
பொருளாகி…
ஐங்கரன் என்ற யானை
முகத்தோனின் தம்பியாகி
ஆறு கார்த்திகை
பெண்களின் மைந்தனாகி
ஏழு ஸ்வரங்களின் இசையாகி
எட்டுக் கட்டைகளின் மொழியாகி…
ஒன்பது கோள்களின்
நாயகனானவனே!
பசியோடு வந்தவர்க்கு ஈன்றிட
பத்தும் செய்யும்
பணத்தையும்…
அப்பணத்தின் மேல்
பற்றற்று வாழும்
மனத்தையும் எனக்குத்
தந்தருள்வாய்!
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!