நான் நெல் விதைத்த விளைநிலம் எல்லாம்
இன்று வேலி அமைத்து வீடுகட்ட காத்திருக்கிறது
நான் குதித்து விளையாடிய குளங்களும் கிணறுகளும்
வற்றிப் போய் வானத்திடம் மழைக்காக வாதாடுகின்றன
எனக்கு கணிதத்தையும் உடற்பயிற்சியையும்
கற்றுக்கொடுத்த பல்லாங்குழி பம்பரம் விளையாடிய
என் கைகள் இன்று கைப்பேசியால் களவாடப்பட்டன
நான் பனை மட்டையில் செய்த காற்றாடியை
சுற்றி விட்ட பசுமைக் காற்று கார்ப்பரேட்
கம்பெனிகளால் கருநிறமாக கலங்கிப் போனது
தடம் தெரியாமல் தண்ணீர் நிரம்பி ஓடிய என் ஆறுகள்
இடம் தெரியாமல் களை அடைந்து கிடைக்கின்றன
முப்போகமும் முத்துக்களாக மழை கொடுத்த மேகங்கள்
மரங்களின் சுவாசம் இல்லாமல் கலைந்து செல்கின்றன
உழுது பயிர் செய்த உழவன் எல்லாம் இன்று
உணவுக்காக ஊர் ஊராகச் சென்று
கூனிக் குறுகி எடுபிடி வேலை செய்து
நாணியே வாழ்வை நகர்த்துகிறான்
நாடு முன்னேறுகிறது என்ற முட்டாள்தனமான
எண்ணங்களை விட்டு விடு
உன் பழமையையும் பெருமயைையும்
எப்போதும் எவருக்கும் விட்டுக் கொடுக்காதே
இந்த உலகத்தின் அழிவுக்கு காரணம்
இயற்கை சூழ்நிலை மாற்றம் அல்ல
மனிதனின் சுயநல ஏற்றம் தான்
இளைஞர்களே, இனிக் காதலிப்போம்
அழகு பெண்ணை அல்ல
அழியும் நிலையில் உள்ள
நம் தாய் மண்ணை!
பா.தீர்த்தமலை
இளங்கலை வேதியியல் மூன்றாம் ஆண்டு
பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி
திருச்சி-23
கைபேசி: 9943492755
கல்லூரியில் கவிதையின் மூலம் எனக்கு நண்பரான பா.தீர்த்தமலை
உங்களின் கவிதை அருமை.
“இந்த உலகத்தின் அழிவுக்கு காரணம்
இயற்கை சூல்நிலை மாற்றம் அல்ல
மனிதனின் சுயநல ஏற்றம் தான்”
வாழ்த்துக்கள் கவிஞரே,நண்பரே !!!
அருமையாக உலகின் அழிவைப் பற்றி சொன்ன என் நண்பனுக்கு வாழ்த்துகள்