அவனைக் காண

அவனோடு இருக்கும் பொழுது தெரியாத

பாசம் காலம் கடந்த பின் புரிகிறது

சிறு சிறு சண்டைகளுக்கு அவனை வெறுத்த

என் மனம் இப்போது ஏங்குகிறது

மீண்டும் இணைய மாட்டோமா என்று

ஆயிரம் சண்டை போட்டாலும்

வீட்ருக்குள் நுழைந்ததும் அவனை தான்

என் கண்கள் முதலில் தேடும்

நீ பெரியவனா நான் பெரியவனா என்பது மாறி

எங்கு நீ தான் பெரியவன் எனும் படி ஆனது

தொப்புள்க்கொடி சொந்தம் இறைவனால்

கொடுக்கப்பட்ட பரிசு

ஒருவேலையை ஆளுக்கு சரி பாதி

பிரித்து செய்ய சண்டை போட்ட

காலம் போய் ஆனது வேலையையும்

அவள் மட்டுமே செய்யும் நிலை

தொலைக்காட்சிக்கும் திண்பண்டத்திற்கும்

சண்டை போட்டக் காலத்தில் இருந்திருக்கலாம்

பிரிவை சந்திக்காமல் இருந்த இருப்போம்

வயது ஆக ஆக பிரிவும் வளரத் தொடங்குகிறது

பள்ளிக்கு செல்லும் முன் அப்பா கொடுக்கும்

பத்து ரூபாயை சரி பாதியாகக் பிரித்து கொடுத்து

என்னுடன் பண்டம் தின்றவன்

இன்று பத்தாயிரம் அனுப்பி அம்மாவிடம்

செலவிற்கு கொடுக்கும் போது தான் யோசிக்கிறேன்

அவன் வளர்ந்து விட்டான் என்று

தம்பி என்னும் உறவைத் தாண்டி அவன்

எனக்கு எல்லாமாகவும் இருப்பதை காலம்

கடந்து பிரிந்து கொண்டேன்

பள்ளி விடுமுறை தினங்களில்

அம்மாவிடம் திட்டு வாங்கி

விளையாட சென்ற அவன் தான்

இன்று வெளியூரில் தங்கி விடுமுறைக்கு கூட

வராமல் உழைக்கிறார் குடும்பத்திற்காக

என்னை அறியாமல் அவனுக்கு தாயாக வாழ்ந்திருக்கிறேன்

அவனது கலப்படமில்லாத அன்பிற்கு முன்

இன்று அவன் எனக்கு தாயாக மாறிவிட்டான்

அரசு விடுமுறையை எண்ணிக் கொண்டிருக்கிறேன்

அவனைக் காண

மீண்டும் இணைந்து வாழ ஆசைப்படுகிறேன்

எனக்கு பத்து உனக்கு எட்டு என்னும் பருவத்தில்

மு.சீத்தாலட்சுமி