அவன் சங்கிலியால்
கட்டப்பட்டிருந்தான்
அதன் விட்டத்தில் பயணிக்க
முட்கள் கொண்ட
செடியில் ஈரத்துணி
ஒன்று மாட்டிக் கொண்டது
அதன் ஜாக்கிரதை
பறிபோன நிலையில்
அவனுக்கு ஒரேயொரு
வழிதான் இருந்தது
கீட்ஸ் பிரித்த
அந்த நடன மனிதனை
அவன் பார்த்தான்
இரட்டையர்களின் வித்தியாசம்
ஒரு தாய்க்குத் தெரிவதைப் போல்
செல்களின் உடைவை
நுண்ணோக்கியில் பார்த்தார்கள்
கூண்டிலிருந்து பறவை
பறந்து சென்றபோது
அவனுக்கும் விடுதலை கிடைத்தது
பீத்தவனின் ஐந்தாவது
சிம்பொனி அவன் கதவைத் தட்டியது
மறுமொழி இடவும்