தன் குழந்தை விஜய தசமி நாளில் கல்வி கற்க ஆரம்பிக்க வேண்டும் என நிறைய பெற்றோர் விரும்பலாம். அவர்களும் மற்றவர்களும் ஆசிரியரின் மதிப்பைப் புரியும் வண்ணம் வாட்சப்பில் உலா வந்த கவிதை.
அ கற்றுத் தந்தவரே
ஆனந்தமாய் வாழச் சொன்னவரே
இன்னல்கள் தீர்க்க வழி கற்றுத்தந்தவரே
ஈ மொய்க்கும் பண்டம் உண்ணாதே என்றவரே
உள்ளம் தூய்மையடையச் செய்தவரே
ஊருக்கு உழைக்கச் சொன்னவரே
எண்ணம் தெளிவு கொள் என்றவரே
ஏற்றம் பல காணச் செய்தவரே
ஐயம் அகற்று என்றவரே
ஒற்றுமையைக் கற்றுத் தந்தவரே
ஓதல் சாலச் சிறந்தது என்று உணரச் செய்தவரே
ஔவை பாட்டியை அறிமுகம் செய்தவரே
என் உயர்வை உமக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!