தோசைக்கல்
எண்ணெய் சூடாயிருக்கிறது
முட்டை உடைக்கப்படுகிறது
சரி பாதியாய்
மஞ்சள் கருவும் வெள்ளைக் கருவும்
புது ஓவியமொன்றை
வரைந்து பழகுகின்றன
பெப்பரும் சால்ட்டும் சேர
அரை வேக்காட்டுடன்
மிதமான சூட்டுடன்
வாயின் உள்ளே செல்கிறது
ஆஃப் பாயில்
உயிர் இருந்தது
மஞ்சளிலா இல்லை வெள்ளையிலா
எங்கிருந்தால் என்ன?
சுவையோடு கலந்திருந்தது
இறந்து போயிருந்த
ஓராயிரம் கோழிகளின்
இரத்தம்…

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
தமிழ்ப் பேராசிரியர்
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி
ஆவடி, சென்னை – 600062
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
அருமை சார்..
Excellent thought processes..
மாறுபட்ட கோணத்தில்
ஒரு படைப்பு…
இனி என் வாயெல்லாம் இரத்தம் உறைதல் நிகழும்..
உங்கள் கைகளை கழுவி விடாதீர்கள்..
நான் கொஞ்சம் முகர்ந்து கொள்கிறேன்…
சூப்பர் சார்