ஆகச் சிறந்த அரசியல்

ஆகச் சிறந்த அரசியல்

நன்றாகவே தெரியும் இந்த காரியத்தை செய்தால் எதிர்வினை இப்படித்தான் இருக்கும் என்று.

எதற்கும் தன் நெருங்கிய இரகசிய நபர்கள் சிலருடன் இதைப் பற்றி யோசித்து, இந்த வழியைப் பயன்படுத்தி இதன் வாயிலாக‌ அரசியல் செய்ய வேண்டும் என்று மேலிடம் சொல்வதாக பகடி ஆடினான் தலைவன்.

“ஏன்? செய்தால் என்ன? இதில் ஒன்றும் நமக்கு இழுக்கு இல்லை!” என்று ஒரு சாரரும்; “இருந்தாலும் நாமும் அக்கா தங்கையுடன் பிறந்து இருக்கிறோம்; எதற்கு இந்த வம்பு!” என்று மற்றொரு சாரரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.

எல்லாம் காலத்தால் மறக்கப்படும் அல்லது மறைக்கப்படும் என்கிற நியதி உண்மை என்பதை உணர்ந்த தலைவன், தன் ‘இரண்டு’ செயலாளரிடமும் இப்படிச் சொன்னான்.

உங்கள் இருவரில் ஒருவர் நம் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து, அதற்கு காரணம் “நீதி கேட்டேன்; நிதி வந்தது” என்று சொல்ல வேண்டும் என்றும், அதற்கு மறுநாள் தான் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அதற்கு விளக்கம் அளிப்பதாகவும் சொன்னார்.

இருவரும் கைநீட்டினர் “எவ்வளவு தொகை கொடுப்பதாக இருக்கிறீர்கள்?”

அடுத்த நாள் செய்தி

“அந்த உறுப்பினர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்!” என்று.

செல்வராஜ் ராமன்
18/33, நெல்லு கடைத்தெரு
கும்பகோணம் – 612001
கைபேசி: 9095522841