அந்த வீடு, இன்னும் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது; சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்றபோது அந்த வீடு பழைமை காத்தது.
பெரிய திண்ணை. பிறகு முற்றம். நல்ல பரந்த வழிநடப்புகள், சிறிய அறை, பெரிய சமையல் அறை. என்ன சொல்ல? அந்த வீட்டைப் பார்ப்பதற்காகவா சென்றான் சாமி?
இல்லை, இல்லவே இல்லை. அந்த அழகை, தேவதையை அவள் குடியிருக்கும் வீட்டில் பார்ப்பதற்கு ஏதோ சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொண்டு போக வேண்டிய தருணம் பார்த்து போனான் என்பது தான் உண்மை !
அந்த உரையாடல்கள், விதவை அம்மா, சகோதரன் கல்யாணம் ஆகவில்லை, கரிசனங்கள், கவனிப்புகள் என்று எல்லாம் பிடித்து இருந்தது சாமிக்கு .
அப்போ, எதற்கு இந்த ஒப்பனை.எல்லாவற்றையும் அடுத்த நாள் சொல்லிவிட வேண்டியதுதான் என்று நினைத்து காத்து இருந்தான்.
அவளே சொன்னாள் “எனக்கு முறைப்படி வரும் ஞாயிறு பெண் கேட்டு வருகிறார்கள். அதற்காக முதல் நாள் சனிக்கிழமை நாங்கள் குடும்பமாக குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டி இருப்பதால் விடுப்பு வேண்டும்” என்று நீட்டினாள் கடிதத்தை.
சாமி, மேலாளர் ஆமோதித்தார்;அனுமதித்தார்.
இதயம் கேட்டது “இனிமேல் அப்படி சொல்லாதே என்று யாரை கேட்பது?”
செல்வராஜ் ராமன்
18/33, நெல்லு கடைத்தெரு
கும்பகோணம் – 612001
கைபேசி: 9095522841