ஆசனப் பயிற்சி என்பது யோகாவின் முதல் நிலையாகும். ஆசனப் பயிற்சி பற்றிய சில தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
1.முதலில் எளிதான ஆசனங்கள் செய்ய வேண்டும்.
2.ஆசனங்களை வரிசைப்படுத்தி செய்ய வேண்டும்.
3.ஒவ்வொரு ஆசனத்திற்கும் மாற்று ஆசனம் செய்ய வேண்டும்.
உதாராணமாக புஜங்காசனம் செய்த பிறகு பவனமுத்தாசனம் செய்ய வேண்டும்.
ஆசனங்கள் செய்யும் வரிசை
முதலில் நின்றபடி செய்யக் கூடிய ஆசனங்கள் செய்ய வேண்டும்.
உதாரணம்: தாடாசனம், உத்தானாசனம் போன்றவை.
இரண்டாவதாக படுத்தபடி செய்யக்கூடிய ஆசனங்கள் செய்ய வேண்டும். உதாரணம்: சேதுபந்தாசனம், ஜடரபரிவிருத்தி போன்றவை.
மூன்றாவதாக வயிற்றில் படுத்தபடி செய்யம் ஆசனங்கள் செய்ய வேண்டும். உதாரணம்: புஜங்காசனம், சலபாசனம் போன்றவை.
நான்காவதாக உட்கார்ந்தபடி செய்யக் கூடிய ஆசனங்கள் செய்ய வேண்டும். உதாரணம்: மகாமுத்திரா, ஜானுசிரசாசனம், வஜ்ராசனம் போன்றவை.
ஆசனப் பயிற்சிக்குப் பிறகு உட்கார்ந்தபடி
பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) தியானம் செய்ய வேண்டும்.
யோகப் பயிற்சிக்குப் பிறகு 5-10 நிமிடங்கள் இளைப்பாற வேண்டும்.