ஆசிரியர்

ஆசிரியர்

ஆசிரியர்

நீங்கள் நடத்திய பொழுது

என் செவிகள் கேட்டன!

உங்களால் என் கைகள் எழுதின!

நீங்கள் திட்டும் பொழுது

என் தவற்றை உணர்ந்தேன்!

ஒரு தாய் தந்தையாய் இருந்து

என் தவறை மாற்றிய குருவே,

உங்களைப் பார்த்தேன்;

கடவுளைப் பார்த்தேன்!

 

நம்பிக்கை

வானம் தொட வா; அது

உனக்காக காத்திருக்கிறது!

தோல்வியை நினைத்து வருந்தாதே;

எல்லாம் கடந்து போவதே!

காலம் கண்டு பயப்படாதே;

காத்திருக்கும் உனக்கு இனிதே!

 

நட்பு

என் தாயின் மூலம் அன்பை பார்த்தேன்!

என் தந்தையின் மூலம் பாசத்தைப் பார்த்தேன்!

என் ஆசிரியர் மூலம் கல்வியைப் பார்த்தேன்! – தோழி

உன் மூலம் உயிரிலும் மேலான நட்பைப் பார்த்தேன்!

 

 

பாரதியார்

வட்ட பொட்டு இட்டு

முறுக்கு மீசை கொண்டு

முண்டாசு கட்டி

கண்ணம்மா என பாடியவர்

யார்?

நம்ம பாரதியார்

 

தமிழ்மொழி

தாய் போன்ற என் மொழியே!

நீ வாழ என் உயிர் இருக்கு!

நீ வளர என் நெஞ்சம் இருக்கு!

என்றும் உனக்கு உயர்விருக்கு!

 

Visited 1 times, 1 visit(s) today