உச்சி மலையில் ஏறி பூத்திருக்கும் பூவெடுத்து
உன் தலையில் சூடிடத்தான் ஆசை!
பிச்சிப் பூ போல் இருக்கும் உன் மூக்கில்
சின்னதாக வைரக்கல்லை வச்சிடத்தான் ஆசை!
பச்சைக் கிளியைப் போல நீ பேசும்
வார்த்தையில நல்லதொரு பாட்டெழுத ஆசை!
செக்க சிவப்பாக வெட்கப்படும் உன் முகத்தை
என் உள்ளங்கையில் தாங்கிடத்தான் ஆசை!
மொச்சைக்கொட்டை தோலுரிச்சு மொத்தமா
உன் பல்லாச்சு; அத்தனையும் நான் கடிக்க ஆசை!
வச்ச பொட்டு நெத்தியிலே வட்ட நிலா போலிருக்க
நான் மேகமாக மாறிடத்தான் தான் ஆசை!
பச்சை வாழை தண்டைப்போல உன் பாதத்தை நான்
பார்த்திருக்க பனித்துளி ஆகிடத்தான் ஆசை!
அச்சுவெல்ல பாகைப்போல உன் அங்கமொல்லாம்
மாறிப்போச்சு; சின்ன சித்தெரும்பா நானாக ஆசை!
வீச்சருவா கண்ணுக்குள்ள நீ வச்சிருக்க
சின்ன புள்ள; அதில் வெட்டுப்பட காத்திருக்க ஆசை!
கூச்சமின்றி சொல்லுறேன்டி; உன் கூட வாழனும்
வரம் வேண்டி காலமெல்லாம் காத்திருக்க ஆசை!
அச்சச்சோ அத்தை பார்த்தா அடிப்பாளே பாவி மக
அதை மொத்தமாக வாங்கிட தான் ஆசை!
நிச்சயமா உனக்காக நாளெல்லாம் காத்திருந்து
நடுகல்லாக ஆகிடத்தான் ஆசை!
கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்