ஆட்டம் பாட்டம்

காராம்பசு கழுத்துமணி ஓசை கேட்குது – எங்க

கண்ணுக்குள்ள மின்னலொண்ணு மின்னி மறையுது

தூரமலை ஓரம்நிலா துள்ளி எழும்புது – அதை

தொடப்பயந்து சூரியனும் ஓடி ஒளியுது

 

அரைக்குடுக்கை சோறுஎடுத்து போனகூட்டமே – இங்க

சேர்ந்திட எங்களுக்கு ஆட்டம்பாட்டமே

இரைதேடி திரும்பிவரும் பறவைக் கூட்டமும் – இனி

இனியகுரலில் எங்களோட சேர்ந்துபாடுமே

 

நாரைக்கூட்டம் நடுவானில் பறந்துபோகுமே – சும்மா

நாங்ககூட அதைவிரட்டி ஓடிப்பார்ப்போமே

தேரைதவளை எல்லாமங்கக் கூடிநிக்குமே – எங்க

தெம்மாங்கு பாட்டுக்குத்தான் தாளம்போடுமே

 

ஊரெல்லாம் உறங்கும்வரை எங்க கூட்டமே – தினம்

ஊறங்காம இருப்பதுதான் உண்மையாகுமே

ஆறஅமர நீங்களும்தான் இருந்துபார்க்கவே – இங்க

ஆடிப்பாட எங்களோட சேரத்தோணுமே.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.