ஆட்டுக் குட்டி முன்கால் தூக்கி
அங்கும் இங்கும் துள்ளும் - அதன்
அழகு நெஞ்சை அள்ளும்
ஆட்டுக் குட்டி ஓடி ஓடி
அம்மா என்றே கத்தும் – தாய்
ஆட்டின் மடியை முட்டும்
ஆட்டுக் குட்டி அழகுக் குட்டி
அருகில் படுத்துத் தூங்கும் – தாய்
அருகில் படுத்துத் தூங்கும்
ஆட்டுக் குட்டி துடுக்குக் குட்டி
அணைக்கப் போனால் முட்டும் – தாய்
அருகில் ஓடிக் கத்தும்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!