தன்னைக் காக்கத் தனித்திருப்போம்!
உயிர் காக்க ஊரடங்கி இருப்போம்!
உயிர் காக்கும் உத்தரவும்
உயிர் பறிக்கும் காலனாகும்!
மனிதமற்ற மண்ணில்
மரணமென்பது சிறு செயல்!
பிறப்பளிக்க துணிந்தவனுக்கு
இறப்பளிக்க அச்சமா என்ன?
ஆளாளுக்கு அதிகாரம் செய்தால்
இங்கு ஆண்டவனுக்கு என்ன வேலை?
பரணி செல்வராஜ்
பழனி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!