ஆத்தோரம் காட்டுக்குள்ள பாட்டு ஒன்னு கேக்குது
அம்மாடி அந்த சந்தம் என்ன ஏதோ பண்ணுது
நாத்தெல்லாம் கூடிக் கூடி அந்த தாளத்துக்கு ஆடுது
நந்தவன காத்தும் கூட நல்ல மணம் வீசுது
சேத்துக்குள்ள துள்ளும் மீனைத்தேடி கொக்கும் பார்க்குது
செத்த நேரம் தியானத்திலே ஒத்தக்காலில் நிக்குது
ஊத்துத் தண்ணி சலசலனு என்ன கதை சொல்லுது
உட்கார்ந்து கேட்டுச் செல்ல நம்ம மனம் ஏங்குது
ஒத்தையில நிற்கிற பனையோலை என்ன பேசுது
உன் கவிதைக்கேற்ற ஓலை நான் தரவா என்றது
இத்தனையும் நடந்தது கனவென ஆனது
இன்னும் என்ன உறக்கம்
அம்மா திட்டும் போது புரியுது
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!