நமது உருவப்படம் அல்லது பெரிய கண்ணாடியில் நம்மை சுமார் 7 நிமிடம் கூர்ந்து ஞாபகத்துடன் பார்த்தபின் தொழிலுக்குச் சென்றால் நன்மை ஏற்படும். நம் உடலை தளர விடாதபடியும், பெருந்துணிவும், அறிவின் அபிவிருத்தியும், மனத்திட சித்தத்தையும், எதார்த்த சிந்தனையும் முதலிய பல நன்மைகளும் ஏற்படும்.
உள்ளமே கருவறை, உடம்பே ஆலயம், வாய் கோபுரவாயில், உயிரே உயரிய சிவலிங்கம். மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளே மணி விளக்குகள் என எண்ணி உட்கார்ந்து பூஜை செய்க.
தர்ப்பைப் புல்லின் மேல் அமர்ந்து தியானம் செய்தால் பக்தி வளரும். ஞானமும் ஆயுளும் வளரும், செல்வம் பெருகும்.