விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவில் உள்ள முகவூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆனி முப்பழத் திருவிழா பற்றிய பாடல்.
தாண்டிக் குடிமலைத் தரத்து வாழை
தருவித்துப் புடையூட்டிக் கனிதயா ரித்து
தீண்டிடத் திகட்டாத்தித் தித்திதிட னளிக்கும்
தினப்பூ தந்தளித்த தேனும் சேர்த்து
நீண்டிய பாலை நிலத்து விளைந்த
நிறைந்த நயமான பேரீச்சை யிட்டு
மீண்டும் சுவைக்க மிடுக்காய்த் தூண்டும்
மிருதுச் சர்க்கரை மிதமா யிட்டு
வேண்டுமள வுபசுவின் வெண்ணை யுரக்கி
வெகுவாய் மணக்கும் நெய்யை விட்டு
தூண்டிச் சுவையைத் தூக்கித் தரும்பெருந்
தூளாம் கற்கண்டைத் தூக்கலா யிட்டு
நீண்டிய தூரத்தும் நீட்டித்து மணங்கமழ்
நிகரிலாயே லஞ்சாதிக் காயுஞ்சேர்த் திட்டு
வேண்டிய படியே வாகாய்ப் பிசைந்து
அம்மா மாரிக்கு அபிடேகஞ் செய்து
பாண்டியப் பரம்பரைப் பூசைகள் செய்து
பவித்திரத்தை முப்பழத்தி லேற்றிஅமிர் தமாக்கி
வேண்டிய நபருக்கு வேண்டிய அளவு
வெற்றிமலைப் பழபஞ் சாமிர் தத்தை
ஆண்டு தோறும் ஆனி மாதம்
ஆடிமுன் வந்திடும் மாதாந்த வெள்ளியில்
ஆண்டு வரும்மாரி அம்மன் கோவிலில்
அற்புதமாய் அன்புடன் வழங்கிடக் காண்பீர்!
–முகவூர் சசிராஜா க.சந்திரசேகர்