நீண்ட நேரமாக
காத்துக் கொண்டிருக்கிறேன்
இன்னமும் கிடைக்கப் பெறவில்லை
அவளது ஆன்லைன் தரிசனம்!
இருந்தாலும்
அவளுக்கு அறிமுகப்படுத்த
எனக்குப் பிடித்த பாடல்களையும்
ஒலிக் கோர்வைகளையும்
அவள் உள்பெட்டியில்
விட்டுச் செல்கிறேன்!
பூட்டிய கதவின் இடுக்கில்
கடிதங்கள் வீசிச் செல்லும்
தபால்காரனைப் போல்!
ஓராண்டு கடந்தும்
புகைப்படம் நீக்கப்பட்ட
முகவரியற்ற அக்கதவு
இன்னும் திறக்கப்படவில்லை!
ஜி.ஏ. கௌதம்
சென்னை
கைபேசி: 7845606321