தேவையான பொருட்கள்
பச்சரிசி 400 கிராம்
புழுங்கல் அரிசி 400 கிராம்
உளுத்தம் பருப்பு 50 கிராம்
வெந்தயம் 25 கிராம்
தேங்காய் 1 எண்ணம் (பெரியது)
தயிர் 1 கப் (புளித்தது)
சோடா உப்பு ½ டீஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
பச்சரிசி, புழுங்கல்அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை சுமார் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின் ஊறவைத்தவற்றுடன் தேங்காயையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும். கடைசியில் தயிர் சேர்த்து சுமார் பத்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.
பின் ஆப்பமாவில் சோடா உப்பு சேர்த்து ஆப்பக் கடாயில் மாவை நடுவில் சற்று கனமாகவும் ஓரத்தில் மெல்லியதாகவும் வரும்படி ஊற்றி மூடி வைத்து மெல்லி தீயில் வேக விடவும். சுவையான ஆப்பம் தயார். பின் தேங்காய் பாலுடன் பரிமாறவும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!