காலை மாலை அடுப்புக் கூட்டி
காப்பி ஆப்பம் தோசை சுட்டு
கடைத் தெருவில் விற்று வந்தாள்
ஓர் கிழவி
எடுத்த வேலை செய்வதற்கு
அடுத்த வீட்டு பையனுக்கு
சுடச் சுடவே கொடுத்து வந்தாள்
ஓர் ஆப்பம்
எண்ணை வாங்கி வரச் சொல்லவே
எண்ணங் கெட்ட சின்னப் பையன்
மாட்டேன் என்று கூறி விட்டான்
மறுமொழியே
மாட்டேன் என்ற பையனுக்கு
ஆப்பம் தர மாட்டேன் என்றாள் கிழவி
அந்தப் பையன் தூக்கிப் போட்டானாம்
ஆப்பச் சட்டி கீறிடவே
அந்த கிழவி அழுது விடவே
அஞ்சாமல் நின்ற பையன் ஓடிவிட்டான்
இப்படியா முட்டாள் தனம்
எண்ணங் கெட்ட சின்ன பையன்
நமக்கு உதவா நமக்கு உதவா
தோழர்களே
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!