காந்தி மகான் விரும்பியது சாந்திதான் – அவர்
கால்நடையாய் போனதெல்லாம் வேண்டிதான்
அமைதியை வேண்டிதான்
ஏந்தி நின்ற ஆயுதமோ அன்புதான் – அவரை
எப்போதும் வென்றதில்லை கோபம்தான்
எதன் வழியும் கோபம்தான்
அந்திவெயில் தரும் நிறமோ மஞ்சள் தான் – நம்
அண்ணலவர் கொள்கையது பொறுமைதான்
எப்போதும் பொறுமைதான்
அந்நியரின் அடக்குமுறை எதிர்த்துதான் – அவர்
தொடர்ந்து விட்ட அம்புகளோ அகிம்சை தான்
உயர்ந்த அகிம்சைதான்
எந்நிறமும் எம்மதமும் ஒன்றுதான் – அவர்
எண்ணத்திலே உணர்ந்த பொருள் ஒருமைதான்
என்றும் தேச ஒருமைதான்
பண்ணிசைத்துப் பாடிடுவோம் பெருமைதான் – அவரின் பெருமைதான்
பார்முழுதும் ஒன்று கூடும் பொழுதுதான்
(காந்தியை) வாழ்த்தும் பொழுதுதான்
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942