அலகற்றப் பட்சியென
உருவற்று
பெருகிய மனவெளியில்
உஸ்ஸென்று
உயிர்ப்பிக்க சிறகை விரிகிறது
காற்று
அன்பு கருணையென
ஈரம் சுமந்து
திடீரென
சினம் சீற்றமாய் விரிந்து
புழுக்கத்தில் விடுத்தாலும்
இளந்தணலாக
கத கதப்பின் மூச்சாக படர்கிறது
அரவணைத்தப்படி
வளி
தென்றலென்றும்
வாடையென்றும்
என
பல்வேறு குணம் பூண்ட
பருவங்களை பற்றிக் கொண்டு
பராமரிக்கிறது
இயல்பில்
பரிணாபித்துக் கொள்ளும்
இயற்கை
இதுவென
நிகழ்ந்து கொள்ளும் போது
மனிதம்
மனிதமற்று
சூறாவளி ஆகும் போது தான்
ஆர்ப்பரிக்கிறது
மனம்…
கா.அமீர்ஜான்
திருநின்றவூர்
7904072432
இயற்கை பரிபூரணமானது. அதன் கவிதையும் அப்படியே!