ஆறாம் அறிவு தரும் ஆசிரியர்

ஆசிரியர் பணி அறப்பணி

உன்னை உயர்த்தும் அற்புத ஏணி

தருவார் இனிய கல்விக்கனி

என்றும் சுறுசுறுப்பில் அவர் தேனி

அறிவு ஊறும் வற்றாக்கேணி

பள்ளிக்கு ஓடி வா நீ

அங்கே உள்ளார் அறிவுஞானி

அறிவுக்கடல் செல்லும் தோணி

ஆசிரியர் உரைப்பதைப் பேணி

வாழ்வில் உயரலாம் இனி நீ

ஆறாம் அறிவு தினமும் பெற

ஆசிரியர் சொல்படி மனதைத் திற

தினந்தினம் எத்தனையோ தினம்

இத்தினம் அனைத்திற்கும் மூலதனம்

அதுவே ஆசிரியர் தினம்

“வாழ்க ஆசிரியர் சமுதாயம்”

கி.அன்புமொழி

கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்