ஆறுதலைத் தந்திருக்கும் இந்நேரம்…

அழும் போது கூடவே அழவும்
சிரிக்கும் போது கூடவே சிரிக்கவும்
வேண்டும் என்றெல்லாம் இதுவரையில்
யாரையும் கேட்டதில்லை!

மெளனம் இழுத்து வந்த
கல்லறையை ஒத்த நிசப்தத்திலும்
உள் ஒலிக்கும் காதிரைச்சல் தான்
உயிர் இருத்தலை ஊர்ஜிக்கிறது!

எங்கிருந்தோ இலவம் காய்
வெடித்துச் சிதறி காற்றில்
பயணித்த பஞ்சு
கைநுனியில் அமர்ந்து
மறத்த தோலின் உணர்ச்சியை
மீட்டு ஆறுதலளிக்க…
சொச்ச மூச்சுக் காற்றையும்
ஊதிவிட்டு விளையாடும் ஆசையில்லை…

என்னிடம் மௌனித்த குரலும்
வேறு எங்காவது இதே
ஆறுதலைத் தந்திருக்கும் இந்நேரம்…

ச.குரு பிரசாந்
மதுரை
கைபேசி: 9965288806
மின்னஞ்சல்: srguruprasandh111@gmail.com