மனதின்
கடந்த கால ஆழ்மன
உணர்வுகளை நினைவுபடுத்தும்பொழுது
நினைக்க வேண்டிய கட்டாயத்தின் பொழுது
மனம் தீவாக மாறி
தீயாக எரிகிறது
அந்த தீ நம்மை
சுட்டுவிடாமல்
வாட்டிவிடாமல்
பற்றிக்கொள்ளாமல்
பார்த்துகொள்வதுதான்
பக்குவப்பட்ட நிதானம்
அந்த ‘தீ’ யில் குளிர் காய்ந்துவிட்டு
இதமாக பயணத்தை
சுறுசுறுப்பாக்கிக் கொள்வதுதான் வாழ்க்கை
ஆழ்மனம் மேலேழும்புகிறபோது
உள்மனம் மூழ்கிப்போகிறது
எதிலென்றுதான் தெரியவில்லை
வலியில்லாமல் வலுவிழந்து போகிறது
ஆழ்மனதிற்கு அடித்தளம் அமைதியே
அமைதிக்கு அடித்தளம்
ஆழ்ந்த நம்பிக்கையே
நம்பிக்கைக்கு அடித்தளம் நாமே!
ப. கலைச்செல்வன்
இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு
பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி
திருச்சி-23
கைபேசி: 9385517371
கலை தம்பியின் ஆழ் மனம் கவிதையில் மணக்கிறது.
வாசித்து முகர்ந்தேன்…
வாழ்த்துக்கள்..