ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அமைப்பின் பெயர் Academy of Motion Pictures Arts and Sciences. ஆஸ்கர் விருதுக்கான சிலையை வடிவமைத்த கலை இயக்குநர் செட்ரிக் கிப்பன்ஸ். இவர் 11 முறை ஆஸ்கர் பெற்றுள்ளார். ஆஸ்கர் சிலையின் உயரம் 13.5 அங்குலம்.
இதுவரை அதிக (தலா 11) ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படங்கள் : பென் ஹர், டைட்டானிக், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ். ஆஸ்கர் விருது பெற்ற ஒரே தம்பதியினர் : விவியன் லேய் – லாரன்ஸ் ஆலிவர் (1951).
ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் பானு அத்தையா. ‘காந்தி’ படத்தில் ஆடை வடிவமைப்புக்காக ஆஸ்கர் விருது பெற்றவர் : பானு அத்தையா. இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே வாழ்நாள் சாதனைக்காக ஆஸ்கர் விருது பெற்றவர். இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் : ஏ.ஆர்.ரஹமான்.
ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் தயாரிக்கப்பட்ட சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருது 1957 முதல் வழங்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியத் திரைப்படம் எதுவும் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றதில்லை.
இதுவரை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட மூன்று இந்திய திரைப்படங்கள் : மதர் இண்டியா, சலாம் பாம்பே, லகான்.
ஆண்டுதோறும் ஓர் இந்தியத் திரைப்படம் அதிகாரபூர்வமாக இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்படுகிறது.
இதுவரை இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் தெய்வமகன், நாயகன், பேசும் படம், அஞ்சலி, தேவர்மகன், இந்தியன், ஜீன்ஸ், ஹேராம்.
2013ல் வழங்கப்பட்ட 85வது ஆஸ்கர் விருதுகளில் ‘Agro’ சிறந்த திரைப்படத்துக்கான விருதையும், ‘Life of Pi’ படத்தை இயக்கிய லீ சிறந்த இயக்குநருக்கான விருதையும், டேனிஸ்டே லெவிஸ் சிறந்த நடிகருக்கான விருதையும், ஜெனிபர் லாரன்ஸ் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றனர்.
‘Lincoln’ படத்தில் ஆபிரகாம் லிங்கனாக நடித்ததற்காக நடிகர் டேனிஸ்டே லெவிஸ் இந்த விருதை பெற்றார்.
நடிகை ஜெனிபர் லாரன்ஸ் ‘Silver Linings Play Book’ என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.