தீ பற்றிக் கொள்ளும் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால் தீ பற்றிக் கொள்ளாத ஒரு பொருள் ‘ஆஸ்பெஸ்டாஸ்’.
அதனால்தான் தீயணைப்புத்துறை ஊழியர்களின் உடை, ஷூக்கள், கையுறை, தலைக்கவசம் (ஹெல்மெட்) போன்றவை ஆஸ்பெஸ்டாஸ் மூலம் தயாரிக்கப்படுகின்றன.
‘ஆஸ்பெஸ்டாஸ்’ என்பது கிரேக்கச் சொல். ஆஸ்பெஸ்டாஸ் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பொருளல்ல.
2000 ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்கள் இப்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இறந்தவர்களின் உடலைப் பாதுகாக்க ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளை உபயோகித்திருக்கின்றனர்.
கால்சியமும், மக்னீசியமும் கலந்த இராசயனப் பொருள் ஆலிவைன்ஸ் (Olivine) சுரங்கம் மூலம் ஆஸ்பெஸ்டாஸ் பெறப்படுகிறது.
சுரங்கத்தில் ஏற்படும் இரசாயன மாற்றத்தால் ஆலிவைன்ஸ் ஆஸ்பெஸ்டாஸ் நார் இழைகளாக உருவெடுத்து, பின் காயவைக்கப்பட்டு மெஷின் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது.
இந்த நார் இழைகள் மூலம் பிரித்தெடுக்கப்படும் பொருட்கள்தான் ஆஸ்பெஸ்டாஸ் நூல் மற்றும் கயிறு. இவைகளைக் கொண்டு ஆஸ்பெஸ்டாஸ் உடைகள், தகடுகள், பாய்கள் தயாரிக்கப்படுகின்றன.
குளிர்பிரதேசங்களில் குடிநீர்க்குழாய்களின் மேல் ஆஸ்பெஸ்டாஸ் திரவத்தால் பூசுகிறார்கள். அப்போதுதான் நீர் உறையாமலிருக்கும்.
நெருப்பால், தீயினால் பாதிப்பு ஏற்படாமலிருக்க ஆஸ்பெஸ்டாஸ் மூலம் பெயிண்ட், ரப்பர், பீங்கான், ஓடுகள், பிளாஸ்டர், கூரைத்தகடுகள் போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன.
ஆசிட் (அமிலம்) மற்றும் ஆல்கலீஸால் (கார தன்மை கொண்ட ரசாயனப் பொருட்கள்) ஆஸ்பெஸ்டாஸ் பாதிப்படைவதில்லை.
2000 டிகிரி செல்ஷியஸ் முதல் 3000 டிகிரி செல்ஷியஸ் வரை சூடுபடுத்தினாலும் ஆஸ்பெஸ்டாஸ் எரிவதில்லை.
தற்போது 5000 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்திலும் எரியாத ஆஸ்பெஸ்டாஸ் தயாரிக்கப்படுகிறது. இந்த விஷேசமான ஆஸ்பெஸ்டாஸ் ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
உலக நாடுகளில் ஆஸ்பெஸ்டாஸ் தயாரிப்புகளில் அதிகபட்சமாக கனடா நாடு 75 சதவீதமும், குறைந்தபட்சமாக அமெரிக்கா 5 சதவீதமும் ஆஸ்பெஸ்டாஸ் தயாரிப்பில் உள்ளன.
ஆஸ்பெஸ்டாஸ் மூலம் தயாரிக்கப்படும் பெரும்பாலான பொருட்களை அமெரிக்காதான் அதிக அளவில் உற்பத்தி செய்கிறது.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!