விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா!
ஆஹோ… அய்யாஹோ…
ஆத்தா! ஆத்தா! மாரியாத்தா!
ஓம் சக்தி! பராசக்தி!
கடந்த 21 நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த இந்த மந்திர உட்சாடனை, இன்று அதிக பட்சமாகி விருதுநகர் விண்ணை வியாபித்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது.
இந்த வேளையில் அம்மனைப் பற்றி எனது ஒரு சிறு பாடல்.
“வேண்டிக் கொண்டோருக்கு
கேட்டதைக் கொடுக்கும் எங்கள் ஆத்தா!
சட்டி எடுப்போருக்கு செல்வத்தை
கொட்டிக் கொடுக்கும் எங்கள் ஆத்தா!
ரதம் இழுப்போரின் விரதத்தை மெச்சி
வேதனைகள் தீர்க்கும் எங்கள் ஆத்தா!
ஆக்கி வைப்போரின் சோகங்களை
போக்கி வைக்கிறாள் எங்கள் ஆத்தா!
விரதம் இருப்போரின் சோகம் நீக்கி
சுகம் தருகிறாள் எங்கள் ஆத்தா!
பறவை காவடியில் வலம் வருவோரின் மன
பாரத்தை இறக்கி வைக்கும் எங்கள் ஆத்தா!
பங்குனி மாதத்திலே
எங்கள் சோதனைகள் தீர்க்க
பவனி வருகிறாள் எங்கள் ஆத்தா!
உன்னைக் காண வரும் அனைவர் முகத்திலும்
உன்னை தரிசிக்கிறேன் ஆத்தா!
ஆத்தா! ஆத்தா! மாரியாத்தா!
உந்தன் அருள் எல்லோருக்கும்
கிடைக்க வேண்டுகிறோம் எங்கள் ஆத்தா!”
நட்புகள் அனைவருக்கும்
இனிய பங்குனி பொங்கல் நல் வாழ்த்துகள்!
முனைவர் பொ.சாமி
வேதியியல் இணைப் பேராசிரியர்
வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294