இசை

இது என்ன ராகமோ

யார் தந்த தாளமோ

பொதுவாக மனம் மகிழ

உருவான கானமோ?

 

மொட்டு ஒன்று மலராக

வருகின்ற ராகத்தில்

வண்டு ஒன்று ரீங்காரம்

இசைக்கின்ற தாளத்தில்

சட்டென்று நம் காதில்

விழுகின்ற இசை கேட்க                           -இது என்ன ராகமோ

 

எட்டாத மரம் அதில்

குயில் பாடும் ராகத்தில்

எங்கிருந்தோ அலை ஒன்று

இசைக்கின்ற தாளத்தில்

சட்டென்று நம் காதில்

விழுகின்ற இசை கேட்க                          -இது என்ன ராகமோ

 

பொட்டாக விழுகின்ற

மழை நீரின் ராகத்தில்

புள்ளினங்கள் உறவோடு

இசைக்கின்ற தாளத்தில்

சட்டென்று நம் காதில்

விழுகின்ற இசை கேட்க                      -இது என்ன ராகமோ

 

ஒட்டாது வீழ்கின்ற

இசை தந்த ராகத்தில்

ஓடுகின்ற நதி அவளும்

இசைகின்ற தாளத்தில்

சட்டென்று நம் காதில்

விழுகின்ற இசை கேட்க                    -இது என்ன ராகமோ

இராசபாளையம் முருகேசன்     கைபேசி: 9865802942

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.