இடதுகை பழக்கம் உடையவர்கள் ‍‍- ஓர் பார்வை

நம்மிடையே பெரும்பாலோர் வலக்கைப் பழக்கம் உடையவர்களாகவும், சிலர் இடதுகைப் பழக்கம் உடையவர்களாகவும் இருக்கிறோம். இன்னும் சிலர் இரு கைகளையும் சுலபமாகப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள் (Ambidextrous).

உலகப்புகழ் பெற்ற லியானார்-டோ-டாவின்ஸி, மைக்கேல்லேஞ்ஜலோ, பிதோவென், விக்டோரியா இளவரசி போன்றோர் இடக்கைப் பழக்கம் உடையவர்களாக இருந்தும், கொஞ்ச காலம் முன்பு வரை இடக்கைப் பழக்கம் என்பது மக்களிடையே ஓர் குறையாகவே கருதப்பட்டு வந்தது.

இன்றுகூட தங்கள் குழந்தைகள் இடக்கைப் பழக்கம் உடையவர்களாக இருப்பின், அதை ஓர் குறையாக நினைத்து வருந்தும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். குழந்தைகளின் இடக்கைப் பழக்கத்தை மாற்றியமைத்து, அவர்களுக்கு வலக்கைப் பழக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

இயற்கையாகக் கொண்டுள்ள பழக்கத்தைத் திடீரென மாற்றிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்போது குழந்தைகள் தன்னம்பிக்கையை இழந்து விடுவதுடன், அவர்கள் உள்ளத்தில் ஒருவித தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு விடுகிறது.

ஒரு சிலர் பரம்பரைப் பழக்கம் என்கிறார்கள். இன்னும் சிலர் சூழ்நிலை சந்தர்ப்பங்கள் – அதனால் ஏற்படும் பழக்க தோஷம் என்கிறார்கள்.

விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?

நமது மூளையின் இடதுபுற ஹெமிஸ்பியர் (Hemisphere) என்று சொல்லக் கூடிய ஒரு பகுதியானது, உடம்பின் வலப்புற பாதிப் பகுதியை ஆக்கிரமித்துக் கட்டுப்படுத்துகிறது என்றும், மூளையின் வலதுபுற ஹெமிஸ்பியர் பகுதி உடம்பின் இடப்புறப் பாதிப் பகுதியை ஆக்கிரமித்துக் கட்டுப்படுத்துகிறது என்றும் கூறுகின்றனர்.

மூளையின் இடப்புற ஹெமிஸ்பியர் பகுதியின் ஆக்கிரமிப்பைக் கொண்டவர்கள் வலக்கைப் பழக்கம் உடையவர்களாகவும், மூளையின் வலப்புற ஹெமிஸ்பியர் பகுதியின் ஆக்கிரமிப்பைக் கொண்டவர்கள் இடக்கைப் பழக்கம் உடையவர்களாகவும் இருக்கின்றனர்.

மூளையின் இருபற ஹெமிஸ்பியர் பகுதிகளாலும் ஆக்கிரமிப்பே இல்லாதவர்கள்தான் (Ambllldextrous) என்று சொல்லப்படுகிற இருகைப் பழக்கமுடையவர்களாக விளங்குகின்றனர்.

அமெரிக்க மனநோய் நிபுணரான டாக்டர் காமில்லா பென்போ, கணிதத்தில் சிறந்து விளங்கும் எத்தனையோ மாணவர்கள் இடக்கைப் பழக்கத்தைக் கொண்டவர்கள் என்றும், இவர்கள் மூளையின் வலப்புற ஹெமிஸ்பியர் பகுதியின் ஆக்கிரமிப்பை உடையவர்கள் என்றும் கூறுகிறார்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.