இடைவேளை உணவு சர்க்கரை நோய் உள்ளவருக்கு தாழ்நிலை சர்க்கரை உண்டாவதை தடுக்கிறது. அதிகம் பசி எடுப்பதை தடுக்கிறது. சர்க்கரை சீராக இருக்க உதவுகிறது.
இடைவேளை உணவு நேரம்: காலை 10.00 – 11.00 மற்றும் மாலை 4.00 – 5.00
கீழ்க்கண்டவற்றுள் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.
பயறு வகைகள் (1 கப்): மொச்சை, சுண்டல், பட்டாணி, பச்சை பயறு, கொள்ளு, தட்டைபயறு, அவரை, காராமணி
பழ வகைகள் (100 கிராம்): ஆரஞ்சு, சாத்துக்கொடி, ஆப்பிள், மாதுளை, பப்பாளி (ஒரு கீத்து), கொய்யா, தக்காளி
ஏதாவது ஒரு பானம் அருந்துங்கள்.
காபி 1 கப், டீ, பால் (சர்க்கரை இல்லாமல்) இளநீர் 1 கப், எலுமிச்சை ஜூஸ், தக்காளி ஜூஸ் 1 கப், காய்கறி சூப் அல்லது சோடா, நீர்மோர்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!