அர்ச்சுனனைப் போல் வீரத்துடன் இரு
அநீதியை எரிப்பதாய் உன் வீரம் இருக்கட்டும்
கர்ணனைப் போல் கொடையாளியாய் இரு
கல்வியறிவு போதிப்பதாய் உன் கொடை இருக்கட்டும்
கண்ணனைப் போல் கீதா உபதேசம் செய்
கலங்கி நிற்பவர்களுக்காய் உன் உபதேசம் இருக்கட்டும்
இலக்குவணைப் போல் கடமையைச் செய்
இந்த உலக உயர்வுக்காக உன் கடமை இருக்கட்டும்
– மு.அருண்